மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 5 Feb 2022 1:01 AM IST (Updated: 5 Feb 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தூர், 
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
மாரியம்மன் கோவில் 
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு வழிபாடு 
ெதாடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல சாத்தூர் நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Next Story