ஒரே நாளில் 155 பேர் வேட்பு மனு தாக்கல்
சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று ஒரேநாளில் 155 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று ஒரேநாளில் 155 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல்
சிவகாசி மாநகராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வேட்பாளர்கள் அதிக அளவில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் வரை 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 155 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 5 மணிக்கு முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அதிக அளவில் வேட்பாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
பாதுகாப்பு பணி
வழக்கத்தைவிட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் போலீசார் மாநகராட்சி அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
அவ்வப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மாநகராட்சி அலுவலகத்தில் வந்து அவசியமின்றி உள்ளே நின்றவர்களை அப்புறப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். மதியம் 12 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். வேட்புமனு தாக்கல் தொடங்கிய சில நாட்கள் யாருமே வேட்புமனுக்களை தாக்கல் செய்யாத நிலையில் கடைசி நாளான நேற்று ஒரு நாள் மட்டும் 155 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் மொத்தம் 48 வார்டுகளுக்கு இதுவரை 322 பேர் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சுயேச்சைகள் என பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சிவகாசியில் தேர்தல் திருவிழா களை கட்ட தொடங்கியுள்ளது. இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. இன்று மாலையே தேர்தலில் போட்டியிடதகுதியுள்ள வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story