சேலம் மாவட்டத்தில் புதிதாக 435 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  புதிதாக 435 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Feb 2022 1:15 AM IST (Updated: 5 Feb 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 435 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 578 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 435 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி பகுதியில் 123 பேர் மற்றும் சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தர்மபுரி, வேலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 124 பேர் உள்பட மொத்தம் 435 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 706 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 354 பேர் குணமடைந்து உள்ளனர். 1,748 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story