கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 5 Feb 2022 1:24 AM IST (Updated: 5 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.

அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 29 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 72 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 54 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 124 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 459 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 897 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story