இளம்பெண் தற்கொலை
விக்கிரமசிங்கபுரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மேட்டு தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி பாண்டியன் மகன் இதயச்சந்திரன். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரபாவதி (வயது 30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரத்துக்கு வந்தனர். இங்கு இதயச்சந்திரன் தனியார் ஆலையில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இதயச்சந்திரன் வெளியே கடைக்கு சென்றிருந்தபோது, பிரபாவதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரபாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story