சத்தி அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; கிளீனர் சாவு
சத்தி அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் இறந்தார்.
சத்தியமங்கலம்
சத்தி அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் இறந்தார்.
மோதல்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கற்கள் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு ஒரு லாரி வந்தது. சத்தி பண்ணாரி ரோட்டில் ஒரு தனியார் பள்ளி அருகே வந்தபோது லாரி பழுதாகி நின்றுவிட்டது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் சிவகுமார் என்கிற மணி (வயது 52) என்பவர் கிளீனராக வந்தார்.
நேற்று காலை 6.30 மணி அளவில் லாரி பண்ணாரி ரோட்டில் வந்துகொண்டு இருந்தது. அப்போது நிலைதடுமாறி ஏற்கனவே அங்கு பழுதாகி நின்றுகொண்டு இருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
உடல் மீட்பு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிளீனர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். பின்னர் கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் இருந்து சிவகுமாரின் உடலை மீட்டார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story