பள்ளிக்கூட மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளிக்கூட மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:54 AM IST (Updated: 5 Feb 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் பள்ளி்க்கூட மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ஹரிஹரன். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிஹரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story