போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கொள்ளையன் திடீர் சாவு
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கொள்ளையன் திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கொள்ளையன் திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளையன் திடீர் சாவு
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் சுலைமான் (வயது 44). இவர் மீது பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. நேற்று காலை இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி ஓட்டி சென்றார். அப்போது அதன் உரிமையாளர், சுலைமானை பிடித்து, ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தார்.
சுலைமானை போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்து விட்டார்.
காரணம் என்ன?
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சுலைமான் சோர்வாக இருந்ததாகவும், மதிய உணவு கொடுத்தபோது அதை சாப்பிட மறுத்துவிட்டதாகவும் போலீசார் கூறினர்.
மேலும், மாலையில் சுலைமான் வயிறு வலிப்பதாகவும், தலைசுற்றுவதாகவும் கூறியதால் அவரை உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்றும் தெரிவித்தனர்.
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கொள்ளையன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story