வீர அஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு


வீர அஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 5 Feb 2022 2:45 AM IST (Updated: 5 Feb 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

வீர அஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு

கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே உள்ள அனுமாநல்லூர் கிராமத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில்  18 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த  திட்டமிட்டு அதற்காண திருப்பணி வேலைகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றது. திருப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 1-ந் தேதி மகாகணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி காப்பு கட்டுதல் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மறுநாள் பஞ்சசுத்த ஹோமம் நடைபெற்றது. 
தொடர்ந்து 3-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றது. பின்னர்  தீபாராதனை நடைபெற்ற பிறகு,  மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.   இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story