கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை


கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2022 3:19 AM IST (Updated: 5 Feb 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே மதுகுடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே மதுகுடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 கொத்தனார்
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்த செல்வராஜ். இவருடைய மகன் ரேகன் (வயது 30),கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்த பழக்கத்தை நிறுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், மது குடிப்பதை நிறுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ரேகன் மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கினார். நீண்ட நேரமாகியும் எழுந்து வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்றனர். அங்கு அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரேகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரேகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story