மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தேவசகாயம் மவுண்ட் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆன்றோ (வயது 25). இவருடைய நண்பர் அதே பகுதிைய சேர்ந்த சூர்யா(21). நண்பர்களான இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இருவரும் நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சூர்யா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஆன்றோ பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள், தோவாளை பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென திரும்பியதால், எதிர்பாராத விதமாக அதன் மீது சூர்யா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே விபத்துக்கு காரணமான அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், ஆன்றோ மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆன்றோ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமாக வாகனத்தை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story