நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 189 பதவிகளுக்கு 1,114 பேர் வேட்பு மனு தாக்கல்
புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 189 பதவிகளுக்கு 1,114 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். தொடர்ந்து நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதில் வேட்பு மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் குவிந்தனர். புதுக்கோட்டை நகராட்சியில் நேற்று ஒரேநாளில் 166 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 42 வார்டுகளுக்கு மொத்தம் 334 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளுக்கு ஒரேநாளில் 78 பேர் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 148 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பேரூராட்சிகள்
இதேபோல பேரூராட்சிகளில் நேற்று ஒரேநாளில் ஆலங்குடியில் 43 பேரும், அன்னவாசலில் 27 பேரும், அரிமளத்தில் 43 பேரும், இலுப்பூரில் 58 பேரும், கறம்பக்குடியில் 49 பேரும், கீரனூரில் 55 பேரும், கீரமங்கலத்தில் 28 பேரும், பொன்னமராவதியில் 53 பேரும் என மொத்தம் 8 பேரூராட்சிகளில் 356 பேர் மனுதாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மொத்த வேட்பு மனு தாக்கல் ஆலங்குடியில் 76 பேரும், அன்னவாசலில் 76 பேரும், அரிமளத்தில் 78 பேரும், இலுப்பூரில் 97 பேரும், கறம்பக்குடியில் 82 பேரும், கீரனூரில் 73 பேரும், கீரமங்கலத்தில் 68 பேரும், பொன்னமராவதியில் 82 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் 189 கவுன்சிலர்கள் பதவிக்கு மொத்தம் 1,114 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story