ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி


ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 5 Feb 2022 5:01 PM IST (Updated: 5 Feb 2022 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

ஆரணி

ஆரணி அடுத்த கோனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்  (வயது 70), ஓய்வுபெற்ற ஆசிரியர். 

இவர் நேற்று  இரவு ஆரணியில் நடந்த உறவினர் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு, இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். 

ஆரணி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெசல் அருகே சென்றபோது அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 

அதில் குப்பன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்து குறித்து அவரின் மகன் கலையரசன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஷாபூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story