வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர்கள்


வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர்கள்
x
தினத்தந்தி 5 Feb 2022 7:00 PM IST (Updated: 5 Feb 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 226 நிலையான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இங்கு முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியாகியும் 2-வது டோஸ் செலுத்தாத நபர்களை கண்டறிந்து அங்கன்வாடி ஊழியர்கள் முகாம்களுக்கு அழைத்து வந்தனர். மேலும் 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

வீடு தேடி தடுப்பூசி

இதன் மூலம் சுகாதார ஊழியர்கள் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தியதோடு, தேயிலை தோட்டங்கள் மற்றும் கூலி வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். 

வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்களுக்கு நடமாடும் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது டோஸ் 100 சதவீதம் செலுத்தும் பணி நடந்து வருகிறது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

10½ லட்சம் பேருக்கு...

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 246 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 984 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். நீலகிரியில் இதுவரை முதல் டோஸ் 5 லட்சத்து 42 ஆயிரத்து 528 பேர், 2-வது டோஸ் 5 லட்சத்து 17 ஆயிரத்து 689 பேர் என மொத்தம் 10 லட்சத்து 60 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனா மற்றும் ஒமைக்ரான் இல்லாத நீலகிரியை உருவாக்க வேண்டும் என்றனர்.


Next Story