யானைகள் வழித்தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
யானைகள் வழித்தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும்போது, மலைரெயில் பாதையை கடக்கின்றன. இதற்கு இடையூறாக அங்கு ரெயில்வே துறையினர் கட்டிய தடுப்புச்சுவர் இருந்தது. இதையடுத்து ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகில் இருந்த தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த மலைரெயில் பாதையில் குன்னூர் முதல் கல்லார் வரை யானைகள் வழித்தடம் குறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம், குன்னூர் வனச்சரகர் சசிக்குமார் மற்றும் வனத்துறையினர் டிராலி மூலம் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் வழிடத்தடங்களை மறித்து ரெயில்வே துறை மூலம் தடுப்புச்சுவர் கட்டி இருப்பது தெரியவந்தது. அதை இடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதை ஏற்று தடுப்புச்சுவர்களை இடிப்பதாக ரெயில்வே துறையினர் உறுதி அளித்து உள்ளனர்.
Related Tags :
Next Story