நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு தென்மண்டல ஐ.ஜி. அன்பு தகவல்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  பதற்றமான வாக்குச்சாவடிகளில் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு  தென்மண்டல ஐ.ஜி. அன்பு தகவல்
x
தினத்தந்தி 5 Feb 2022 8:14 PM IST (Updated: 5 Feb 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு அறிவுறுத்தினார்.

தேனி:
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு நடவடிக்கைகள், ரவுடிகள் கண்காணிப்பு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன், போலீஸ் ஐ.ஜி. அன்பு ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகள் கூறினார். அப்போது ஐ.ஜி. கூறியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்களின் அச்சத்தை போக்க கொடி அணிவகுப்பு நடத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரவுடிகள் மற்றும் பிரச்சினைக்குரிய நபர்கள் என பட்டியலில் உள்ள நபர்களை கண்காணிக்க வேண்டும். அத்தகைய நபர்களை ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தி சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என சுயஉறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரும் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது, தேர்தல் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.

Next Story