உடுமலை நகராட்சி தேர்தலையொட்டி வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 199 வேட்பாளர்களில் 2 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி
உடுமலை நகராட்சி தேர்தலையொட்டி வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 199 வேட்பாளர்களில் 2 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி
உடுமலை:
உடுமலை நகராட்சி தேர்தலையொட்டி வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 199 வேட்பாளர்களில், 2 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள்மற்றும் மாற்று வேட்பாளர்கள் என மொத்தம்199 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை உடுமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் மேற்பார்வையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நேற்று பரிசீலனை நடந்தது. 1 முதல் 11-வது வார்டு வரை, 12 முதல் 22-வது வார்டு வரை, 23 முதல் 33-வது வார்டு வரை என வேட்பு மனுக்கள் பரிசீலனைக்காக 3 அறைகள் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்டு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. வேட்புமனுக்கள் பரிசீலனையை முன்னிட்டு அரசியல் கட்சி வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் குவிந்திருந்தனர்.
அவர்கள், வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்த அறைகளுக்கு வரிசைப்படி ஒவ்வொருவார்டு வாரியாக அழைக்கப்பட்டனர். இதற்காக அலுவலக வாயிலில் நகராட்சி பணியாளர் ஒருவர் நின்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டிருந்தார்.
அதன்படி அலுவலகத்திற்குள் வந்தவர்களுக்கு நுழைவு வாயில் பகுதியில், கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் அவர்களது பெயர் மற்றும் செல்போன் எண், நோட்டில் எழுதி பதிவு செய்யப்பட்டன.
2 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 2 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 13-வது வார்டில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர், இந்த தடையின்மை சான்றை இணைக்காததால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
19-வது வார்டு பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையில் ஆண் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அந்த வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதனால் அந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த 2 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது போக மீதி 197 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுவை வாபஸ் வாங்குவதற்கு விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story