ஏலச்சீட்டு நடத்தி ரூ.49 லட்சம் ஏமாற்றிய தம்பதி கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 Feb 2022 10:17 PM IST (Updated: 5 Feb 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

ஏலச்சீட்டு நடத்தி ரூ.49 லட்சம் ஏமாற்றிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

கரூர்
ஏலச்சீட்டு
கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் தோகைமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில் கடந்த 2021-ம் ஆண்டு கடவூர், பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், அதில் தன்னையும் சேர சொன்னதன் பேரில் மொத்தம் 20 மாதங்களுக்கு, மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 3 சீட்டுகள் சேர்ந்து 20 மாதம் முடிவில் ரூ.3 லட்சத்தை தராமல் ஏமாற்றியதாகவும், இதேபோல் 18 நபர்களிடம் ஏலச்சீட்டு முதிர்வு தொகை மொத்தம் ரூ.49 லட்சம் தராமல் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது
வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து சரவணன், ஜானகி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் அறிவுறுத்தியதின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
இந்நிலையில் அவர்களை கண்காணித்து கடந்த 4-ந் தேதி சரவணன், ஜானகி ஆகியோரை கைது செய்து அவர்கள் ஏலச்சீட்டு நடத்தியதற்கான ஆவணங்களை கைப்பற்றி, இருவரையும் நீதிமன்ற காவலுக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.  இவ்வழக்கில் கடந்த 7 மாதமாக தலைமறைவாக இருந்தவர்களை புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களை கையாண்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பாராட்டினார்.

Next Story