மின்சாரம் தாக்கி காரைக்கால் மீனவர் சாவு


மின்சாரம் தாக்கி காரைக்கால் மீனவர் சாவு
x
தினத்தந்தி 5 Feb 2022 10:34 PM IST (Updated: 5 Feb 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரையில், ‘ஹீட்டரில்’ வெந்நீர் வைத்தபோது மின்சாரம் தாக்கி காரைக்கால் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேதாரண்யம்:
கோடியக்கரையில், ‘ஹீட்டரில்’ வெந்நீர் வைத்தபோது மின்சாரம் தாக்கி காரைக்கால் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீனவர்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் காளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன்(வயது43) மீனவர். இவர் கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். 
மின்சாரம் தாக்கி சாவு
சம்பவத்தன்று மீன்பிடிக்க சென்று விட்டு அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர், அலுமினிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ‘ஹீட்டர்’ மூலம் வெந்நீர் வைத்துள்ளார். அப்போது ‘சுவிட்சை’ ஆப் செய்யாமல் தண்ணீர் சூடேறி விட்டதா? என பார்த்துள்ளார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. 
மின்சாரம் தாக்கியதில் சுப்பையன் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சுப்பையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story