குருபரப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி பெண் பலி
குருபரப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி பெண் பலியானார்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி பெண் பலியானார்.
கார்-மினி லாரி மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சுவேதா (வயது 20). இவர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கிருஷ்ணகிரிக்கு உறவினர்களுடன் மினி லாரியில் வந்தார். திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் ஓசூருக்கு திரும்பினர்.
குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் சென்ற போது பின்னால் வந்த கார் மினி லாரி மீது உரசியது. இதனால் மேம்பாலத்தில் லாரியும், காரும் சாலையில் நிறுத்தப்பட்டன. பின்னர் லாரியில் வந்தவர்களும், காரில் வந்தவர்களும் கீழே இறங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பெண் சாவு
இதனால் மினி லாரியில் இருந்து சுவேதா உள்பட அனைவரும் கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி, சுவேதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story