தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையாளர் நேரில் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தர்மபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தர்மபுரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி பயணியர் மாளிகையில் இவர் முகாமிட்டு தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்கிறார். தர்மபுரி அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கட்டுப்பாட்டு அறை
இதைத்தொடர்ந்து தர்மபுரியில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையை நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குனர் பாபு, தர்மபுரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா சுகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story