திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2022 10:41 PM IST (Updated: 5 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
மகாத்மா காந்தி நினைவு நாளில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் கோட்சே- ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருது வழங்குவோம் என அறிவித்தவர்களையும்  கண்டித்தும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்தியபிரதேச மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் செல்வராசு, மாவட்ட இணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மண்டலத் தலைவர் முருகையன் கலந்து கொண்டு பேசினார்.மகாத்மா காந்தி நினைவு நாளில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் கோட்சே- ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருது வழங்குவோம் என அறிவித்தவர்களையும்  கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில மாணவரணி துணை செயலாளர் பொன்முடி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story