சேதமடைந்த குடிநீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூரில் சேதமடைந்த குடிநீர்த் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூரில் சேதமடைந்த குடிநீர்த் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர்த்தேக்க தொட்டி சேதம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் சிவன் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் இடையே உள்ள இடத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர்த்தேக்க தொட்டி கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தற்போது அந்த குடிநீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஓகைப்பேரையூரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு அமைக்கப்பட்ட குடிநீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தை தாங்கி நிற்கும் தடுப்பு தூண்கள் பலம் இழந்த நிலையில் உள்ளது. தடுப்பு தூண்கள் சில சேதமடைந்த நிலையில் உள்ளதால் குடிநீர்த்தேக்க தொட்டி எந்தநேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது.
சீரமைத்து தர வேண்டும்
இதனால் அந்த வழியாக செல்பவர்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். குடிநீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தில் அரசு பள்ளி மற்றும் கோவில், வீடுகள் உள்ளதால் ஏதேனும் விபத்து ஏற்படுமோ? என அப்பகுதி மக்கள் கருத்துகின்றனர். 5 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர்த்தேக்க தொட்டி தடுப்பு தூண்கள் சேதமடைந்துள்ளது. இதுவரை அதனை சீரமைப்பு செய்து தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த கூத்தாநல்லூர் அருகே ஓகைப்ேபரையூரில் சேதமடைந்த குடிநீர்த் தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---

Related Tags :
Next Story