மும்பையில் 3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது முன்னாள் முதல்-மந்திரியின் மனைவி சொல்கிறார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 5 Feb 2022 11:16 PM IST (Updated: 5 Feb 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா கூறியுள்ளார்.

மும்பை, 
மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா கூறியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா நேற்று முன்தினம் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதில், நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 
இதை ஒரு சாதாரண குடிமகனாக நான் சொல்கிறேன். வீட்டை விட்டு வெளியே வந்தால், குண்டும் குழியுமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்சினைகளை  பார்க்கிறேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். 
மும்பையில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினையால் பலரால் குடும்பங்களுடன் நேரத்தை செலவிடமுடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. எனவே இதுபோன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துமாறு மாநில அரசை அறிவுறுத்துகிறேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
மேயர் விமர்சனம்
இந்தநிலையில் அம்ருதா பட்னாவிசின் பேச்சு குறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறுகையில், "அம்ருதா முன்னாள் முதல்-மந்திரியின் மனைவி. போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து ஏற்படுகிறது என அவர் கூறி இருப்பது விசித்திரமாக உள்ளது. விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்படும். முதல் முறையாக இதுபோன்ற ஒரு விசித்திரமான காரணத்தை கேள்விப்படுகிறேன்" என்றார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி, "சாலையில் நிலவும் போக்குவரத்தால் 3 சதவீத மும்பைவாசிகளுக்கு விவாகரத்து ஏற்படுவதாக கூறியுள்ள பெண்ணுக்கு சிறந்த லாஜிக் (இல்லாத) நாள் விருது வழங்கப்படுகிறது. வாகன பிரேக்கில் கவனம் செலுத்துவதை விட்டு, விடுமுறை எடுத்து பிரேக் (ஓய்வு) எடுத்துக்கொள்ளுங்கள். பெங்களூருவில் உள்ள குடும்பங்கள் இதை படிப்பதை தவிர்த்துவிடவும், இது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்." என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Next Story