நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 52 வேட்பு மனுக்கள் தள்ளுபடி 2,158 பேரின் மனுக்கள் ஏற்பு


நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 52 வேட்பு மனுக்கள் தள்ளுபடி 2,158 பேரின் மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 11:19 PM IST (Updated: 5 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 52 வேட்பு மனுக்கள் தள்ளுபடி 2,158 பேரின் மனுக்கள் ஏற்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பரிசீலனையின்போது 52 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2,158 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் 153 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 294 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 5 நகராட்சி மற்றும் 19 பேரூராட்சிகளிலும் கடந்த 28-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 2,210 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
நாமக்கல் நகராட்சியில் 242 பேரும், ராசிபுரத்தில் 153 பேரும், திருச்செங்கோட்டில் 150 பேரும், குமாரபாளையத்தில் 250 பேரும், பள்ளிபாளையத்தில் 103 பேரும் என மொத்தம் 900 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் நாமக்கல் நகராட்சியில் 20 மனுக்கள், ராசிபுரத்தில் 8 மனுக்கள், குமாரபாளையத்தில் 6 மனுக்கள் என மொத்தம் 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 866 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பேரூராட்சிகள்
பேரூராட்சிகளை பொறுத்தவரையில் ஆலாம்பாளையம் பேரூராட்சியில் 68 பேர், அத்தனூரில் 65 பேர், எருமப்பட்டியில் 77 பேர், காளப்பநாயக்கன்பட்டியில் 79 பேர், மல்லசமுத்திரத்தில் 84 பேர், மோகனூரில் 51 பேர், நாமகிரிப்பேட்டையில் 102 பேர், படைவீடு பேரூராட்சியில் 65 பேர், பாண்டமங்கலத்தில் 43 பேர், பரமத்தியில் 60 பேர், பட்டணத்தில் 59 பேர், பிள்ளாநல்லூரில் 79 பேர், பொத்தனூரில் 62 பேர், ஆர்.புதுப்பட்டியில் 49 பேர், சீராப்பள்ளியில் 65 பேர், சேந்தமங்கலத்தில் 65 பேர், பரமத்திவேலூரில் 80 பேர், வெங்கரையில் 76 பேர், வெண்ணந்தூரில் 81 பேர் என மொத்தம் 1,310 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனையின்போது எருமப்பட்டி மற்றும் மல்லசமுத்திரத்தில் தலா 3 மனுக்கள், காளப்பநாயக்கன்பட்டியில் 6 மனுக்கள், படைவீடு மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் தலா 2 மனுக்கள், பட்டணம், வெண்ணந்தூர் பேரூராட்சிகளில் தலா 1 என மொத்தம் 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,282 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
52 மனுக்கள் தள்ளுபடி
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் மொத்தம் 52 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2,158 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Next Story