நாமக்கல் மாவட்டத்தில் 26 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வை 5,500 பேர் எழுதினர் 219 பேர் பங்கேற்கவில்லை


நாமக்கல் மாவட்டத்தில் 26 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வை 5,500 பேர் எழுதினர் 219 பேர் பங்கேற்கவில்லை
x
தினத்தந்தி 5 Feb 2022 11:19 PM IST (Updated: 5 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 26 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வை 5,500 பேர் எழுதினர் 219 பேர் பங்கேற்கவில்லை

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 26 மையங்களில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 5,500 மாணவ, மாணவிகள் எழுதினர். 219 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
திறனாய்வு தேர்வு
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாகவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தேசிய திறனாய்வு தேர்வு நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 12 மையங்கள், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 14 மையங்கள் என மொத்தம் 26 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்து வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுத பதிவு செய்து இருந்தனர். நேற்று காலை 9 முதல் 11 மணி வரை ஒரு பிரிவாகவும், 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை மற்றொரு பிரிவாகவும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
219 பேர் பங்கேற்கவில்லை
நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 2,539 பேர் பதிவு செய்ததில், 2,418 பேர் தேர்வு எழுதினர். 121 பேர் பங்கேற்கவில்லை. அதேபோல் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 3,180 பேர் பதிவு செய்தனர். அதில் 3,082 பேர் தேர்வு எழுதினர். 98 பேர் பங்கேற்கவில்லை. 2 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 5,500 பேர் தேர்வு எழுதினர். 219 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பதற்கு மாதம் ரூ.1,250-ம், இளங்கலை படிப்பதற்கு மாதம் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய திறனாய்வு தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமன், விஜயா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

Next Story