மோகனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


மோகனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 5 Feb 2022 11:19 PM IST (Updated: 5 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மோகனூர்:
மோகனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சி எல்லைக்காட்டுபுதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் பாலப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகள் ஷாலினி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
ஷாலினி கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்சில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு நிஷாந்த், நித்திஸ் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
உதவி கலெக்டர் விசாரணை 
இதனால் மனமுடைந்த ஷாலினி நேற்று காலை எல்லைகாட்டு புதூரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் லட்சுமி மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story