வேலை வாங்கி தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பணம்மோசடி 2 வாலிபர்கள் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பணம்மோசடி 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மகள் சவுந்தர்யா(வயது 20). இவர் கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கள்ளக்குறிச்சியில் வேலைக்கு ஆட்கள் தேவை என ஒட்டப்பட்ட சுவரொட்டியில் உள்ள விளம்பரத்தை பார்த்து சவுந்தர்யா குறிப்பிட்ட இடத்துக்கு சென்றார். பின்னர் அங்கு தனியார் கம்பெனி மேலாளராக அறிமுகம் செய்து கொண்ட தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாசிவேல் மகன் ராஜேஷ்(வயது 32), உதவி மேலாளராக அறிமுகம் செய்துகொண்ட சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த சீரங்கன் மகன் திலீப்குமார்(33) ஆகியோர் வேலையில் சேர சவுந்தர்யாவிடம் இருந்து ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்டு திடீரென தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியை பார்த்த சவுந்தர்யா தன்னை ஏமாற்றிய மர்ம நபர்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அது தொடர்பாக கூட்டம் நடந்த லாட்ஜிக்கு சென்று பார்த்தபோது தன்னை ஏமாற்றியவர்கள் அங்கே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் குறிப்பிட்ட லாட்ஜூக்கு சென்று ராஜேஷ், திலீப்குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வேறு சிலரிடமும் பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story