மணல் கடத்தல்; 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்தல்; 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:29 PM IST (Updated: 5 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மணல் கடத்தல்

பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீசார் கபிஸ்தலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கணபதி அக்ரஹாரம் காவிரி ஆற்றில் இருந்து 7 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. 
இதையடுத்து மாட்டு வண்டி ஓட்டி வந்த சக்கராப்பள்ளி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் கணேசன் (வயது30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

விசாரணை

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story