ஸ்ரீமுஷ்ணத்தில் அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு


ஸ்ரீமுஷ்ணத்தில் அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 11:42 PM IST (Updated: 5 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணத்தில் அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

நெல்லிக்குப்பம், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 14-வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆண் ஒருவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இதன் காரணமாக அவரது மனு நிராகரிப்பு செய்யப்பட்டது. 
இதேபோல், 9-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக மனுதாக்கல் செய்த மருதை மனைவி கவுதமி (32), அவருக்கு மாற்று வேட்பாளரான கிருஷ்ணமூர்த்தி மனைவி சரோஜா (58) ஆகியோரின் வேட்பு மனுக்களும் நிராகரிப்பு செய்யப்பட்டது. 

போலீஸ் குவிப்பு

இதனால், தேர்தல் அலுவலர்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அங்கு அ.தி.மு.க. வினர் ஒன்று திரண்டனர். அதேபோல் தி.மு.க.வினரும் அங்கு திரண்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. 
இதையடுத்து, சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறி அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நெல்லிக்குப்பம் நகராட்சி

இதேபோல் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 173 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. சார்பில் 6-வது வார்டில் மனுதாக்கல் செய்த விக்டோரியா என்பவரின் வேட்புமனுவில் நகராட்சி தடையில்லா சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் இணைக்கவில்லை என்பதாலும், 21-வது வார்டில் இருந்து மனுதாக்கல் செய்த கரோலினா என்பவரின் வேட்புமனுவில் சாதி சான்றிதழ் இணைக்கவில்லை என்று கூறியும் அவர்களது மனுக்களை அதிகாரிகள் நிராகரிப்பு செய்தனர். தொடர்ந்து 171 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Next Story