கோளாறால் நடுவழியில் நின்ற ரயில் என்ஜின்


கோளாறால் நடுவழியில் நின்ற ரயில் என்ஜின்
x
தினத்தந்தி 6 Feb 2022 12:03 AM IST (Updated: 6 Feb 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

கோளாறால் நடுவழியில் நின்ற ரயில் என்ஜின்

கல்லக்குடி, பிப்.6-
திருச்சியிலிருந்து நேற்று விருத்தாச்சலம் நோக்கி ரயில் என்ஜின் சென்று கொண்டிருந்தது. அந்த என்ஜின் புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே மாலை 5.10 மணி அளவில் வந்தபோது, திடீரென்று தொழில்நுட்ப கோளாறால் பழுதடைந்து நின்றது. என்ஜின் வந்ததை தொடர்ந்து புள்ளம்பாடி- திருமழபாடி சாலையில் உள்ள ரெயில் பாதையில் கேட் மூடி இருந்தது. ரயில் என்ஜின் நடுவழியில் நின்றதால் சிக்னல் விழாததால் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால்  புள்ளம்பாடி- திருமழபாடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக புள்ளம்பாடியில் இருந்து வெங்கடாசலபுரம், நத்தமாங்குடி, கோவாண்டகுறிச்சி வழியாக அரியலூர், திருமழபாடி, திருமானூர், தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மாலை 6 மணிக்கு பிறகு ரயில் என்ஜின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து சிக்னல் விழுந்ததால் ெரயில்வே கேட் திறக்கப்பட்டது. அதன்பின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story