தி.மு.க.வில் `சீட்' கிடைக்காததால் களம் இறங்கிய போட்டி வேட்பாளர்கள்
திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் `சீட்' கிடைக்காத அதிருப்தியில் போட்டி வேட்பாளர்கள் பலர் களம் இறங்கி உள்ளனர்.
திருச்சி, பிப்.6-
திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் `சீட்' கிடைக்காத அதிருப்தியில் போட்டி வேட்பாளர்கள் பலர் களம் இறங்கி உள்ளனர். அவர்களை வாபஸ் பெற வைக்க சமாதான ேபச்சுவாா்த்தை நடத்த ேவண்டும் என கேட்டு வருகிறார்கள்.
அதிருப்தியும், இழுபறியும்...
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க. மட்டும் 51 வார்டுகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் நீண்ட இழுபறிக்கு பின்னரே, அதாவது வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளில்தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 வார்டு வேட்பாளர்கள் யார்? என்பதை தெரிய முடிந்தது. அதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த பின்னரே தெரியவந்தது.
இது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குள் ரகசியம் காக்கப்பட்டு வந்தது. களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய தொண்டர்களுக்கு தெரியாது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 வார்டுகள் வீதம் ஒதுக்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு வார்டில் போட்டியிடுகிறது.
தி.மு.க.வில் போட்டி வேட்பாளர்கள்
மேலும் தி.மு.க.வில் எதிர்பார்ப்பில் இருந்த பல நிர்வாகிகளுக்கு `சீட்' கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றத்தில் இருந்த அவர்கள், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு போட்டியாக சுயேட்சையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து களம் இறங்கினர். இது தி.மு.க. வேட்பாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
குறிப்பாக 12-வது வார்டில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளர் வக்கீல் பன்னீர் செல்வத்திற்கு போட்டியாக தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் பாலமுருகன், 14-வது வார்டில் திருமாவளவனை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் வேலு, 15-வது வார்டில் தங்கலெட்சுமியை எதிர்த்து விஜயா, 46-வது வார்டில் ரமேசை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் உஷாராணி, 54-வது வார்டில் வட்ட செயலாளர் புஷ்பராஜை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி, 62-வது வார்டில் சுபாவை எதிர்த்து கவிதா என போட்டி வேட்பாளர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கூட்டணியையும் விட்டு வைக்கவில்லை
அதேவேளையில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவும் தி.மு.க.வினர் களம் இறங்கி இருக்கிறார்கள்.
17-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பிரபாகரனுக்கு எதிராக தி.மு.க. வட்ட செயலாளர் மனோகரன், 39-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்சுக்கு எதிராக தி.மு.க. நிர்வாகி மணிமாறன், 51-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி கருப்பையாவுக்கு எதிராக காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி, 53-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஹேமா, 65-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரன் உள்ளிட்டோரும் போட்டி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியில் தகுதியானவர்களை விட்டுவிட்டு சிலரை வேட்பாளர்களாக அறிவித்த அதிருப்தியில் சுயேட்சையாக களம் இறங்க ஆளாக்கப்பட்டதாகவும், தங்களுக்கு வார்டு மக்கள் செல்வாக்கு இருப்பதால் சுயேட்சையாக களம் கண்டு வெற்றி பெறுவோம் என்கிறார்கள்.
சமாதான பேச்சுவார்த்தை
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்தவர்களே சுயேட்சையாக களம் இறங்கியது அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி உள்ளது. மேலும் கட்சியின் வெற்றியும் பாதிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனவே, உடனடியாக தி.மு.க. தலைமை தலையிட்டு அதிருப்தி வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்க சமாதான பேச்சுவார்த்தை நடத்த வண்டும் என கேட்டு வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுக்களை திரும்ப பெறுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அதிருப்தி வேட்பாளர்கள் உறுதியாக களத்தில் நிற்பார்களா? அல்லது வாபஸ் பெறுவார்களா? என்பது நாளை தெரிந்து விடும்.

Related Tags :
Next Story