திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
x
தினத்தந்தி 6 Feb 2022 12:26 AM IST (Updated: 6 Feb 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

திருச்சி, பிப்.6-
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
202 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 202 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 427 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆனால் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பலியாகினர்.
மொத்த பாதிப்பு
இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,148 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்து 698 ஆகும்.

Next Story