சட்டகல்லூரி மாணவி வேட்பு மனு நிராகரிப்பு


சட்டகல்லூரி மாணவி வேட்பு மனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 12:44 AM IST (Updated: 6 Feb 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பா.ஜனதா வேட்பாளரானசட்டகல்லூரி மாணவி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி இந்த முறை முதன் முறையாக நகராட்சி தேர்தலை சந்திக்கிறது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 133 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மானாமதுரை நகராட்சி 2-வது வார்டில் பா.ஜனதா சார்பில் மதுரை சட்டக்கல்லூரி மாணவி ரஞ்சிதா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின் போது அவருக்கு வயது 20 என மனுவில் குறிப்பிட்டு இருந்ததால் அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இதை தொடர்ந்து 132 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Next Story