மணல் திருட்டு; 3 பேர் கைது


மணல் திருட்டு; 3 பேர் கைது
x

பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணகுடி:

பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசிமுத்து மற்றும் போலீசார் லெப்பைகுடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்ததாக, லாரி டிரைவர் தெற்கு கருங்குளத்தை சேர்ந்த கணேஷ்குமார் (வயது 24), பொக்லைன் டிரைவர் ஆவரைகுளம் பாலசுந்தரம் (23), லெப்பைகுடியிருப்பு ஹரிகிருஷ்ணன் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story