மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2022 1:25 AM IST (Updated: 6 Feb 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக்கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக சட்ட பேரவையில் அனைத்து கட்சியினரும் சேர்ந்து நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் பயிற்சி வேலு.குணவேந்தன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் பாசித் சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சியின் தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் வீரசெல்வம், மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story