வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா


வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா
x
தினத்தந்தி 6 Feb 2022 1:31 AM IST (Updated: 6 Feb 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 

மாசி திருவிழா

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. பின்னர் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

சுவாமி வீதி உலா

மாலை 6 மணிக்கு பெண்கள் 1,008 திருவிளக்கு பூஜை நடத்துகின்றனர். இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
மேலும் கோவில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடைபெறும். 

தொடர்ந்து 10 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரும் திருவிழாக்களை நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.

Next Story