தமிழகத்தில் நீட் தேர்வை இன்றும் எதிர்க்கிறோம், நாளையும் எதிர்ப்போம்-ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


தமிழகத்தில் நீட் தேர்வை இன்றும் எதிர்க்கிறோம், நாளையும் எதிர்ப்போம்-ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2022 1:47 AM IST (Updated: 6 Feb 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீட் தேர்வை இன்றும் எதிர்க்கிறோம், நாளையும் எதிர்ப்போம் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலூர்
தமிழகத்தில் நீட் தேர்வை இன்றும் எதிர்க்கிறோம், நாளையும் எதிர்ப்போம் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடியில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அன்றும் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்றும் எதிர்க்கிறோம். நாளையும் எதிர்ப்போம். நீட் ேதர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரை உறுதியாக அ.தி.மு.க. எதிர்க்கும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
கவர்னர்
தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுப்பது குறித்து கேட்கிறீர்கள். இந்திய அரசியலமைப்பின்படி கவர்னர் தனது பணிகளை செயல்படுத்தி வருகிறார். 
இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
--------------

Next Story