பட்டாசு வெடித்ததில் தோட்டத்தில் தீ
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு வெடித்ததில் தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு வெடித்ததில் தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
மாதிரி வெடி
வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த காமராஜர் காலனி முத்தீஸ்வரன் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மக்காச்சோளம் தோட்டத்தில் அறுவடை சமீபத்தில் முடிந்தது. இந்த தோட்டத்தின் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பணி முடிந்ததும் மாதிரி வெடிகளை வெடித்து பார்ப்பது வழக்கம். அதேபோல நேற்று வழக்கம்போல் ராக்கெட் வெடி தயார் செய்ததை எவ்வாறு வெடிக்கிறது என்பதை பார்ப்பதற்காக பட்டாசில் பற்ற வைத்தனர். எதிர்பாராமல் ராக்கெட் முத்தீஸ்வரன் தோட்டத்தில் விழுந்ததால் சோள தட்டையில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து உடனடியாக வெம்பக் கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைத்தனர்
தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு படைவீரர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பட்டாசு ஆலையில் தீவிபத்து எதுவும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மக்காச்சோளம் அறுவடை முடிந்த பின் தீ விபத்து நடந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story