ரூ.1¾ லட்சம் பறிமுதல்


ரூ.1¾ லட்சம்  பறிமுதல்
x
தினத்தந்தி 6 Feb 2022 2:09 AM IST (Updated: 6 Feb 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, வத்திராயிருப்பு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.1¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி, வத்திராயிருப்பு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.1¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
சிவகாசி 
சிவகாசி சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ஆனந்தராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் வேலாயுதரஸ்தாவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்த பிரபு (வயது 31) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.93,850-ஐ மோட்டார்சைக்கிளில் வைத்திருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை, அதிகாரிகள் சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். 
வத்திராயிருப்பு 
அதேபோல வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ. புதுப்பட்டி பேரூராட்சியில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை செய்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமம் ஒத்தக்கடையை சேர்ந்த வேலு என்பவர் வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 79,300 இருந்தது தெரியவந்தது. எனவே பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் வ.புதுப்பட்டி பேரூராட்சியின் தேர்தல் அலுவலர் சிவ அருணாச்சலத்திடம் ஒப்படைத்தனர்.

Next Story