சேலம் மாவட்டத்தில் புதிதாக 386 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு 1¼ லட்சத்தை தாண்டியது
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1¼ லட்சத்தை தாண்டியது.
சேலம்,
குறைந்து வருகிறது
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் மீண்டும் ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 435 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 102 பேர், சேலம் ஒன்றியத்தில் 100 பேர், ஆத்தூர் பகுதிகளில் 54 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து வந்த 17 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 15 பேர், கோவை, காஞ்சீபுரத்தில் இருந்து வந்த தலா 14 பேர், கரூரில் இருந்து வந்த 12 பேர், திண்டுக்கல்லில் இருந்து வந்த 11 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 10 பேர், செங்கல்பட்டு, ஈரோட்டில் இருந்து வந்த தலா 9 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 8 பேர், வேலூரில் இருந்து வந்த 7 பேர், திருப்பூரில் இருந்து வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1¼ லட்சத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 856 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 7 ஆயிரத்து 141 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1¼ லட்சத்தை தாண்டியது. அதாவது, இதுவரை கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story