சென்னிமலை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது


சென்னிமலை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 6 Feb 2022 2:12 AM IST (Updated: 6 Feb 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை
சென்னிமலை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்
சென்னிமலை அருகே உள்ள ராமலிங்கபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மகன் மாணிக்கம் (வயது 34). இவர் சென்னிமலை பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில துறை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 
மற்றொரு அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருபவர் 17 வயதான மாணவி. இவருக்கு மாணிக்கம் சித்தப்பா முறை என கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
இதை அறிந்த மாணிக்கம் நைசாக அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது மாணவியை அவர் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் பயந்து போன மாணவி கூச்சல் போட்டுள்ளார். அதற்கு மாணிக்கம், சத்தம் போட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.
அதன்பின்னர் 2 முறை அந்த மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவியின் பெற்றோர் அவரை சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மாணவி கர்ப்பம்
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 
உடனே இதுபற்றி மாணவியிடம் கேட்டனர். அப்போது அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சென்னிமலை போலீசில் ஆசிரியர் மாணிக்கம் மீது புகார் கொடுத்தனர்.
ஆசிரியர் கைது
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மாணிக்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

Next Story