வாக்குச்சாவடியில் டி.ஐ.ஜி. ஆய்வு


வாக்குச்சாவடியில் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2022 2:17 AM IST (Updated: 6 Feb 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மதுரை சரக டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மதுரை சரக டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
 டி.ஐ.ஜி. ஆய்வு 
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு ஆகிய 4 பேரூராட்சிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு குறித்தும், தேர்தல் அன்று எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தார். அப்போது இந்த 4 பேரூராட்சிகளில் எந்தெந்த வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கேட்டு அறிந்தார். அப்போது அவர் அங்கு கூடுதலாக பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுரை வழங்கினார்.
பாதுகாப்பு 
மேலும் வாக்குச்சாவடிகளில் தேர்தலின்போது எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
இந்த ஆய்வின் போது  மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story