மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேல்தேவா தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டேவிட், சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "தமிழக கவர்னர், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை நிகழ்வு என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவர்களை திரட்டி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றனர்.
Related Tags :
Next Story