கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 6 Feb 2022 2:29 AM IST (Updated: 6 Feb 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

பெங்களூரு:

பாதிப்பு

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 12,009 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 309 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 38 லட்சத்து 87 ஆயிரத்து 733 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

  அதே வேளையில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 50 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 300 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக பெங்களூரு நகரில் 4 ஆயிரத்து 532 பேருக்கு பாதிப்பு உறுதியானது. பாகல்கோட்டையில் 122 பேர், பல்லாரியில் 481 பேர், பெலகாவியில் 1,028 பேர், பெங்களூரு புறநகரில் 129 பேர், பீதரில் 93 பேர், சாம்ராஜ்நகரில் 186 பேர், சிக்பள்ளாப்பூரில் 99 பேர், சிக்கமகளூருவில் 66 பேர், சித்ரதுர்காவில் 436 பேர், தட்சிண கன்னடாவில் 252 பேர், தாவணகெரேயில் 82 பேர், தார்வாரில் 303 பேர், கதக்கில் 61 பேர், ஹாசனில் 413 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

25,854 பேர் குணமடைந்தனர்

  ஹாவேரியில் 171 பேர், கலபுரகியில் 297 பேர், குடகில் 373 பேர், கோலாரில் 132 பேர், கொப்பலில் 129 பேர், மண்டியாவில் 275 பேர், மைசூருவில் 763 பேர், ராய்ச்சூரில் 150 பேர், ராமநகரில் 98 பேர், சிவமொக்காவில் 419 பேர், துமகூருவில் 342 பேர், உடுப்பியில் 202 பேர், உத்தர கன்னடாவில் 217 பேர், விஜயாப்புராவில் 126 பேர், யாதகிரியில் 32 பேர் பாதிக்கப்பட்டனர்.

  நேற்று 25 ஆயிரத்து 854 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 37 லட்சத்து 39 ஆயிரத்து 197 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 203 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  பெங்களூரு நகரில் 15 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், மைசூருவில் 4 பேர், கலபுரகியில் 3 பேர் உள்பட 50 பேர் இறந்தனர். பாதிப்பு எண்ணிக்கை 9.04 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.41 சதவீதம் உள்ளது.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story