சேலம் மாநகராட்சி 37-வது வார்டில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்


சேலம் மாநகராட்சி 37-வது வார்டில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2022 2:32 AM IST (Updated: 6 Feb 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி 37-வது வார்டில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 
அடிப்படை வசதிகள்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் 37-வது வார்டு உள்ளது. இந்த வார்டுக்கு உட்பட்ட நாகபடையாச்சி காடு பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு சாலை, சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தரக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், சாலை, சாக்கடை கால்வாய் என அடிப்படை வசதிகளை செய்து தராத காரணத்தினால் நாகபடையாச்சி காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டிபோராட்டத்தில் ஈடுபட்டனர். 
தேர்தல் புறக்கணிப்பு
மேலும், 37-வது வார்டில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பேனரும் வைத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story