பெங்களூருவில் 2 ஆண்டுகளாக பெண்ணை சிறைவைத்து கற்பழிப்பு
பெங்களூருவில் 2 ஆண்டுகளாக பெண்ணை சிறைவைத்து கற்பழித்த நண்பர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கங்கமனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 27 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபருடன் பழக்கம் உண்டானது. இதனால் அந்த நபருடன், பெண் நண்பராக பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை, அவரது நண்பர் எசருகட்டாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அவரது நண்பர் கற்பழித்ததாக தொிகிறது.
அதன்பின்னர் அந்த இளம்பெண்ணை தனது வீட்டிலேயே சிறைவைத்து நண்பர் கற்பழித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் விடுவித்து இருந்தார். ஆனால் அதன்பின்னரும் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட அவரது நண்பர் எனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அந்த கடனை என்னால் அடைக்க முடியவில்லை. இதனால் அவர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின்போில் கங்கமனகுடி போலீசார் நண்பர், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story