சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையை தேர்தல் பார்வையாளர் ஆய்வு


சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2022 2:57 AM IST (Updated: 6 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

சேலம்,
தேர்தல் பார்வையாளர்
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதனை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வேட்பாளர்களின் வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக பரிசீலனை செய்யப்படுகிறதா? என்றும், வார்டுகள் வாரியாக வேட்புமனு தாக்கல் செய்த அனைவரையும் ஒரே சமயத்தில் வரவழைத்து, வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தார்.
பின்னர் வார்டுகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா?, பெறப்பட்ட வேட்புமனுக்களை வார்டுகள் வாரியாக தனித்தனியாக பிரித்து தொடர் வரிசை எண் கொடுத்து பதிவேடுகள் பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பதையும், வேட்புமனு பரிசீலனையின் போது போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை கேட்டறிந்தார்.
மாநகராட்சி அலுவலகம்
இதேபோல் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நேற்று தேர்தல் பார்வயைாளர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தேர்தலையொட்டி செயல்பட்டு வரும் கட்டுப்பாடு அறையை பார்வையிட்டு தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்துள்ளதா? என்றும், அவ்வாறு வரப்பெற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 
இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, சாந்தி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story