சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியில் கடந்த 3-ந் தேதி தங்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் இருகையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றுமுன்தினம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்கலம் கிராமத்தில் 100 நாள் வேலை சரிவர வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் சந்துரு கொடுத்த புகாரின்பேரில் இருகையூர் கிராமத்தை சேர்ந்த பூபதி(வயது 60), ஜெயந்தி உள்பட 25 பேர் மீது தா.பழூர் போலீசார் முறையற்று தடுத்து நிறுத்துதல், சட்டவிரோதமாக கூடுதல், கொரோனா தொற்றை பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் தேவாமங்கலத்தில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேவாமங்கலத்தை சேர்ந்த மனோகரன், ராமச்சந்திரன், மணிமேகலை உள்ளிட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story