சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் கோரியம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(வயது 25). இவர் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் பேசி அந்த சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பமடைந்த சிறுமி பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்த போது, அவருக்கு குழந்தை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகேயன் அங்கு வந்து விசாரணை நடத்தி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து சரவணனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார். மேலும் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் சரவணனின் தந்தை சந்திரன்(50), தாய் தேவிகா(44) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story